உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துணை மேயர் தலைமையில் 20 கவுன்சிலர்கள் மனு

துணை மேயர் தலைமையில் 20 கவுன்சிலர்கள் மனு

காரைக்குடி:காரைக்குடி மேயர் தி.மு.க.,வைச் சேர்ந்த முத்து துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி துணை மேயர் தலைமையில் தி.மு.க., காங்., அ.தி.மு.க., உட்பட 20 கவுன்சிலர்கள் கமிஷனரிடம் மனு அளித்தனர்.காரைக்குடி மாநகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., 18, அ.தி.மு.க.,7, காங்., 3, இ.கம்யூ.,1, சுயேச்சை 7 பேர். 14 வது வார்டு கவுன்சிலர் மனோகரன் ராஜினாமா செய்த நிலையில் 35 கவுன்சிலர்கள் உள்ளனர்.தி.மு.க.,வை சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், தி.மு.க., நகரச் செயலாளர் குணசேகரன் துணை மேயராகவும் உள்ளனர். நேற்று, மேயர் முத்து துரை தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கமிஷனர் சங்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 13 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 22 பேர் கலந்து கொள்ளவில்லை.துணை மேயர் குணசேகரன் தலைமையில் கவுன்சிலர்கள், கமிஷனர் சங்கரன் இல்லத்திற்கு சென்றனர். அங்கு மேயர் முத்துத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற கோரி கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கவுன்சிலர்களை மதிப்பதில்லை, ஒருமையில் பேசுகிறார், கோரிக்கைகளை புறக்கணிக்கிறார் என குறிப்பிட்டுள்ளனர்.கமிஷனர் சங்கரன் கூறுகையில், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். முறையாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை