கோட்டையூர் ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற மனு
சிவகங்கை: காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள கண்மாய்களுக்கு மழை நீர் வரும் ஓடைகளை சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளதாக பொதுமக்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.காரைக்குடி அருகே கோட்டையூரில் சேகரமாகும் மழை நீர் இரண்டு ஓடைகள் வழியாக கோட்டையூர் கண்மாய், தென் ஊரணி, குருநாதன் கோயில் ஊரணியில் சேகரமாகும். இங்கு சேகரமாகும் தண்ணீரை மக்கள் பயன்பாட்டிற்கும், கால்நடைகளுக்கு குடிநீராகவும், விவசாய தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோட்டையூரில் உள்ள கண்மாய், ஊரணிகளுக்கு நீர் வரும் ஓடைகளை கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். எனவே கண்மாய், ஊரணிகளுக்கு வரும் நீரை தடுக்கும் விதமாக ஓடைகளில் ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.