மேலும் செய்திகள்
2 மாதங்களில் 10,268 மாற்றுத்திறனாளிகள் சேர்ப்பு
23-Jul-2025
சிவகங்கை:உலக வங்கி நிதி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க, 3 ம் கட்டமாக 24 மாவட்டங்களில் வீடுகள் தோறும் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். 21 விதமான மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், உதவி தொகை கிடைக்க உலக வங்கி நிதி உதவி அளிக்க உள்ளது. இந்த நிதியின் மூலம் மாற்றுத்திறனாளிகளை கண்டறிய 3 ம் கட்டமாக மதுரை, சிவகங்கை, திருவாரூர், அரியலுார் உட்பட 24 மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்களை கொண்டு, வீடு தோறும் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இக்கணக்கெடுப்பில் அக்குடும்பத்தின் ரேஷன் கார்டு எண், வீட்டில் மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்களின் பாதிப்பு தன்மை, அடையாள அட்டை வைத்துள்ளார்களா என்பது போன்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி கூறியதாவது: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், உலக வங்கி நிதி உதவி 75 சதவீதம் வரை வழங்குகிறது. மாநில அரசு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யும். கணக்கெடுப்பு மூலம் ஏற்கனவே அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவையான உபகரணங்கள், உதவி தொகையை தொடர்ந்து கிடைக்க செய்ய வேண்டும். புதிதாக மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்தால், அவர்கள் பற்றிய விபரங்களை 'திறன்' போர்டலில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றுத்தர வேண்டும். அதற்கு பின் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளி உபகரணம், உதவி தொகை பெற்றத்தருவதே இத்திட்டத்தின் நோக்கம். தமிழகத்தில் ஒரு மாற்றுத்திறனாளி கூட நலத்திட்டங்கள் பெறுவதில் விடுபடக்கூடாது என்ற நோக்கத்தில், முழு வீச்சில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர், என்றார்.
23-Jul-2025