உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே வனத்துறை அனுமதி கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியால் 10 கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பில் இருந்து உரத்துப்பட்டு செல்லும் 5 கி.மீ., தூர தார்ச்சாலை 1999 ஆம் ஆண்டு போடப்பட்டது. அதற்கு பிறகு சாலை பழுதடைந்த நிலையில் 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. கடந்த 2020ல் மீண்டும் புதிதாக சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. 3 கி.மீ., தூரம் தார் சாலை போடப்பட்ட நிலையில் இடையில் மூன்று இடங்களில் 2 கி.மீ., தூரத்திற்கு வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளதாக வனத்துறை யினர் அனுமதி மறுத்தனர். இதனால் கிராவல் கொட்டப்பட்டு கற்கள் பரப்பிய நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அப்படியே உள்ளது. இதில் நடந்து கூட செல்ல முடியாமல் சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிப் படுகின்றனர். மாவட்டத்தில் இதேபோன்று மேலும் சில சாலைப் பணிகள் தடை பட்டிருந்த நிலையில், வனத்துறையின் தடையில்லா சான்று பெறப்பட்டு அப்பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால் இச்சாலைக்கு மட்டும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. விரைந்து அனுமதி பெற்று பணிகளை முடிக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை