மேலும் செய்திகள்
கரடு,முரடான விஜயன்குடி ரோடு
18-Oct-2024
இளையான்குடி: இளையான்குடி அருகே புதூரில் டிரான்ஸ்பார்மரில் செடி, கொடிகள் வளர்ந்துஉள்ளதால், மின்பழுது பார்க்க ஊழியர்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இளையான்குடி அருகே புதுார் மெயின் ரோட்டில்அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படும் டிரான்ஸ்பார்மரில் கடந்த சில வாரங்களாக செடிகள்வளர்ந்து காணப்படுவதினால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.மேலும் மெயின் ரோட்டிற்கு அருகாமையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இவ்வாறு செடிகள் வளர்ந்து இருப்பதை மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதினால் மிகப்பெரிய அளவில் மின் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
18-Oct-2024