உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமிகளுக்கு தொல்லை 3 பேர் மீது போக்சோ

சிறுமிகளுக்கு தொல்லை 3 பேர் மீது போக்சோ

காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள மானாவயலைச் சேர்ந்த 15 வயது சிறுமி தங்கையுடன் அருகில் உள்ள டியூசனுக்கு சென்று வந்துள்ளார். தினமும் டியூசன் சென்று வரும்போது பொய்யாவயலைச் சேர்ந்த காளிதாஸ், உடையப்பன், மாணிக்கம் ஆகியோர் சிறுமிகளிடம் அலைபேசி எண் கேட்டும், கைகளால் சைகை செய்தும் தொந்தரவு செய்துள்ளனர். சிறுமிகள் தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளனர். அவரது அண்ணன், சிறுமிகளை டியூசனுக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் நின்ற மூவரும் பைக்கை மறைத்து, மூவரையும் தாக்கியதோடு சிறுமிகளையும் தொந்தரவு செய்துள்ளனர். காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார், காளிதாஸ், உடையப்பன், மாணிக்கம் ஆகிய 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி