உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதியவர் மீது போக்சோ வழக்கு

முதியவர் மீது போக்சோ வழக்கு

சிவகங்கை; சிவகங்கை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த முதியவர் செல்வமணி 70. இவரது வீட்டிற்கு அருகில் மூன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகின்றார். சிறுமியின் குடும்பத்தில் அலைபேசி இல்லாததால் முதியவர் செல்வமணியிடம் போனை பேசுவதற்காக அடிக்கடி வாங்கி பயன்படுத்தி உள்ளனர். கடந்த 3ம் தேதி சிறுமியின் தாயார் முதியவரிடம் போனை வாங்கி பேசி விட்டு போனை முதியோரிடம் கொடுக்குமாறு சிறுமியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அதற்கு சிறுமி அங்கு செல்ல மாட்டேன் என்று கூறி மறுத் துள்ளார். சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்த போது கடந்த ஜூலை 18ம் தேதி இதே போல் சிறுமி போனை கொடுக்க சென்ற போது அந்த முதியவர் சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் முதியவர் செல்வமணி மீது சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் முதியவர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை