உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரி தெருக்களில் இல்லாத சி.சி.டி.வி., கேமரா திணறும் போலீசார்

சிங்கம்புணரி தெருக்களில் இல்லாத சி.சி.டி.வி., கேமரா திணறும் போலீசார்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி நகரில் பெரும்பாலான தெருக்களில் சி.சி.டி.வி.,கேமரா பொருத்தப்படாததால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இப்பேரூராட்சியில் சில ஆண்டுகளாக வீடுகளை உடைத்து தொடர்ச்சியாக நகை, பணம் கொள்ளை போய் வருகிறது. டூவீலர்களும் காணாமல் போகின்றன. பல குற்ற சம்பவங்களில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை. கேமரா இல்லாத வீடு, தெருக்களையே கொள்ளையர்கள் குறிவைக்கின்றனர். இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். நகரில் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த போலீசார் வலியுறுத்தலின் பேரில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்படும் பட்சத்தில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதுடன் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் வாய்ப்பாக அமையும். எனவே 18 வார்டுகளிலும் உள்ள முக்கிய சந்திப்புகளில் கேமரா பொருத்த போலீசார் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை