உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காவல் உதவி மையத்தால் பயனில்லை போலீஸ் இல்லாததால் தொடரும் மோதல்

காவல் உதவி மையத்தால் பயனில்லை போலீஸ் இல்லாததால் தொடரும் மோதல்

காரைக்குடி: காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காவல் உதவி மையத்தில், போலீசார் இல்லாததால் பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.காரைக்குடி மாநகராட்சியில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் என இரு பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு, பயணிகளின் பாதுகாப்பிற்கும், உதவிக்கும் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.காரைக்குடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர். புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, திருச்சி, கோயம்புத்துார், திருப்பதி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் செல்கின்றன. மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து செல்வதால் பஸ் ஸ்டாண்டில், அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்ட ஒழுங்கு பிரச்னையை தடுத்திடவும், புறக்காவல் நிலையம் மற்றும் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு நிரந்தரமாக போலீசார் பணியமர்த்தப்படுவதில்லை.காலை மற்றும் மாலை நேரங்களிலும் கூட்டம் அதிகமான நேரங்களிலும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிலவுகிறது. தவிர, பஸ்களை யார் முதலில் எடுப்பது என்பதில் உருவாகும் பிரச்னை காரணமாக தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களிடைய மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்க பஸ் ஸ்டாண்ட்களில் உள்ள, உதவி மையம் மற்றும் புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக போலீசாரை நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ