உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ் செய்திகள் சிவகங்கை

போலீஸ் செய்திகள் சிவகங்கை

காப்பர் கம்பி திருட்டு சிவகங்கை: கோவானுாரில் 'பர்ஸ்ட் எனர்ஜி சோலார்' பிளான்ட் உள்ளது.அதன் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் 31.ஆக.,16 அன்று மாலை 6:00 மணிக்கு மேல் சிலர் இங்குள்ள பிளான்டில் நுழைந்து,அங்கிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 8,000 மீட்டர் காப்பர் கம்பியை திருடி சென்றதாக புகார் கொடுத்துள்ளார். சிவகங்கை தாலுகா எஸ்.ஐ.,சவுந்திரராஜன் விசாரிக்கிறார். டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி காளையார்கோவில்: நெடுவத்தாவு கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி 47.இவர் ஆக.,15 அன்று மாலை 5:00 மணிக்கு டூவீலரில் சென்றார். இருப்பான்பூச்சி விலக்கு அருகே சென்றபோது,நிலை தடுமாறி டூவீலரில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளாகினார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்,சிகிச்சை பலனின்றி ஆக.,21 அன்று காலை 9:30 மணிக்கு உயிரிழந்தார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை