மேலும் செய்திகள்
செங்கையில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
21-Nov-2026
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என ஆயிரத்து 217 நிரந்தர மையங்களிலும் 54 நடமாடும் மையங்களிலும், 19 இடைநிலை மையங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடி உள்ளிட்ட 1290 முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஆயிரத்து 513 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று மற்றும் நாளை வீடுகளுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் 5 ஆயிரத்து 404 பணியாளர்கள் பணிபுரிந்தனர்.
21-Nov-2026