உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 4.17 லட்சம் கார்டுக்கு பொங்கல் தொகுப்பு வினியோகம்! இன்று டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

4.17 லட்சம் கார்டுக்கு பொங்கல் தொகுப்பு வினியோகம்! இன்று டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

மாவட்ட அளவில் அரிசி, சர்க்கரை கார்டுகள் என 4 லட்சத்து 20 ஆயிரத்து 91 உள்ளன. இந்த கார்டுகளில் அரிசி வாங்கும் நபர்களுக்கு மட்டுமே பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 829 கடைகளில் இப்பொங்கல் தொகுப்பினை 4 லட்சத்து 17 ஆயிரத்து 664 ரேஷன் கார்டுதாரர்கள் பெற உள்ளனர்.இத்தொகுப்பில் கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி வழங்கப்படுகிறது. இதற்காக இன்று முதல் ஜன., 8 ம் தேதி வரை அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்ய உள்ளனர். ஜன.,9 முதல் டோக்கன் எண் வரிசைப்படி அந்தந்த ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் பொங்கல் தொகுப்பினை பெறலாம். ஜன., 13 வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்படும்.

கரும்பு விபரம் சேகரிப்பு

மாவட்ட அளவில் 4.17 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு வழங்கும் நோக்கில், கரும்பு நடவு செய்துள்ள விவசாயிகளிடம் வாங்குவதற்காக வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறையினர் கரும்பின் தரம்,உயரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஜன., 7 முதல் கரும்புகளை அறுவடை செய்து அந்தந்த கடைகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும்.அந்தந்த தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் கரும்பு வழங்க விருப்பம் தெரிவித்துள்ள விவசாயிகளின் விபரங்கள் பெறப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளுக்கு தேவையான 4.17 லட்சம் கரும்பு இங்கு பெறப்படும். பற்றாக்குறை ஏற்பட்டால் மதுரை மாவட்டம், மேலுார் பகுதியில் சென்று வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்.அதே போன்று ரேஷன் கடைகளுக்கு போதிய பச்சரிசி, சர்க்கரை மூடைகளையும் அனுப்பி வைக்க நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத்திடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், துணை பதிவாளர் (பொது வினியோகம்) பாபு ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ