உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற தை பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. உற்ஸவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தை வலம் வந்தனர்.*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை