மேலும் செய்திகள்
அரசுப்பள்ளிக்கு பொருட்கள் வழங்கல்
24-Jan-2025
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவி சி.மகிழினி மற்றும் மாணவன் தர்ஷன் ஆகியோர் பள்ளி கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்றனர். மகிழினி பேச்சுப்போட்டியில் முதலிடத்தை வென்றார். தர்ஷன் மாவட்ட அளவில் இரண்டாமிடத்தை வென்றார். இருவருக்கும் பள்ளி குடியரசு தினவிழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எம்.சோமசுந்தரம், கே.தியாகராஜன்,சிடி.சோமசுந்தரம், எம்.சோமசுந்தரம் குருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எஸ்.ரெங்கராஜன் வரவேற்றார். பள்ளி செயலர் கே.பிச்சை குருக்கள் கொடியேற்றினார். கற்பகவிநாயகர் கோயில் அறங்காவலர்கள் காரைக்குடி சிடி.பழனியப்பன், நச்சாந்துப்பட்டி குமரப்பர், கண்டவராயன்பட்டி தொண்டர் எல்.சொக்கலிங்கம் வாழ்த்தினர்.
24-Jan-2025