உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழை பாதிப்புகளை தடுக்க முன்னேற்பாடு

மழை பாதிப்புகளை தடுக்க முன்னேற்பாடு

மானாமதுரை : மானாமதுரையில் பருவமழை முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரப்படுத்த வேண்டுமென்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவிட்டார். மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையிலும், துணைத் தலைவர் பாலசுந்தரம் முன்னிலையிலும் நடைபெற்றது. பொறியாளர் பட்டுராஜன் வரவேற்றார். கூட்டத்தில் காங்., கவுன்சிலர் புருஷோத்தமன், தி.மு.க., கவுன்சிலர் சதீஷ்குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பருவமழை துவங்கவுள்ள நிலையில் ஆங்காங்கே அடைபட்டுக் கிடக்கும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வாய்க்கால்களை உடனடியாக துார்வார வேண்டும் என்றனர். நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி துணைத்தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் பேசுகையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக அனைத்து வார்டுகளிலும் உள்ள கழிவுநீர் மற்றும் மழை நீர் வாய்க்கால்களை உடனடியாக துார்வாரி,தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அ.தி.மு.க., கவுன்சிலர் தெய்வேந்திரன்,பா.ஜ.,கவுன்சிலர் முனியசாமி(எ) நமகோடி ஆகியோர் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றனர். கூட்டத்தில் மேலாளர் பாலகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ