உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூஜை பொருட்கள் விலை உயர்வு

பூஜை பொருட்கள் விலை உயர்வு

இளையான்குடி: இளையான்குடி, மானாமதுரை சுற்று வட்டார கிராம பகுதிகளில் செவ்வாய் சாற்றுதல், முளைப்பாரி உற்ஸவ விழாக்களால் பூஜை பொருட்கள்,பூ மாலைகள் விலை உயர்ந்துள்ளது. மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளம், வடக்கு சந்தனுார்,வேலுார்,முருகப்பஞ்சான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இதே போன்று இளையான்குடி சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் செவ்வாய் சாற்றுதல், முளைப்பாரி விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கிராமங்களில் விழாக்கள் நடைபெற்றதை முன்னிட்டு மானாமதுரை மற்றும் இளையான்குடி பூஜை பொருட்கள் மற்றும் பூ,மாலை கடைகளில் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் ஒரு தேங்காய் ரூ.40 க்கு விற்ற நிலையில் ரூ. 20 விலை உயர்ந்து ரூ.60க்கும், ரூபாய் 50 க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன மாலை ரூ. 80, ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட மாலை ரூ.150 என அனைத்து பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி