உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்சாரம் தாக்கி இளைஞர் பலி பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு

காரைக்குடி: காரைக்குடி அரசு மருத்துவமனையில் பெற்றோருக்கு தெரியாமல் இளைஞரின் உடலை உடற்கூராய்வு செய்ததாக உறவினர்கள் முற்றுகையிட்டனர். கோட்டையூர் அழகாபுரி சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா 25. எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர் வீடு ஒன்றில் வேலை பார்க்கும் போது மின்சாரம் தாக்கி இறந்ததாக கருப்பையா பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.கருப்பையாவின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து வரும்படி பெற்றோரை அனுப்பி விட்டு, டாக்டர்கள் உடற்கூராய்வு செய்ததாகவும் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் முறையாக தகவல் தராத கம்பெனி முதலாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருப்பையா உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி