உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலை உறுதி திட்ட சம்பளம்; ரூ.600 வழங்க கோரி போராட்டம்  

வேலை உறுதி திட்ட சம்பளம்; ரூ.600 வழங்க கோரி போராட்டம்  

சிவகங்கை; வேலை உறுதி திட்ட பணிகளுக்கான சம்பளத்தை ரூ.600 ஆகவும், வேலை நாளை 200 ஆக அதிகரிக்க கோரி சிவகங்கை, கல்லலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை உறுதி திட்ட பணிக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சம்பளத்தை ரூ.600 ஆக உயர்த்தி, வேலை நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும். தாமதமாக வழங்கப்படும் சம்பளத்துடன் வட்டியை சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் தன சேகரன் தலைமை வகித்தார். முத்துலட்சுமி, லட்சுமி சவுமியா முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான லாசர், மாவட்ட தலைவர் மணியம்மா சிறப்புரை ஆற்றினர். ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன், பொருளாளர் மகாலிங்கம், குழு உறுப்பினர் ஆண்டியப்பன், பாலு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ