உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயன்படுத்த முடியாத ஸ்டேடியம் பராமரிக்காவிட்டால் போராட்டம்

பயன்படுத்த முடியாத ஸ்டேடியம் பராமரிக்காவிட்டால் போராட்டம்

காரைக்குடி: காரைக்குடியில் திறக்கப்பட்ட மினி ஸ்டேடியம் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை சீரமைக்காவிட்டால் வீரர்களை திரட்டி போராட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 9 ஏக்கரில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி, ஸ்டேடியத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். ஓடுதளம், வாலிபால், கூடைப்பந்து, கோ கோ, கபடி மைதானங்கள் பார்வையாளர் அமரும் காலரி, பொருட்கள் வைப்பறை, அலுவலக அறை உட்பட பல்வேறு வசதிகளுடன் ஸ்டேடியம் அமைக்கப்பட்டது. ஆனால், ஸ்டேடியத்தை வீரர்களும் சிறுவர்களும் பயன்படுத்த முடியாத அவலம் நிலவுகிறது. முறையாக மணல் இல்லாமல் கற்களை பரப்பிய தரை உள்ளதால்விளையாட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லை.தொழில் வணிக கழகத்தினர் கூறுகையில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் கட்டப்பட்டதன் நோக்கமே வீணாகும் நிலையில் உள்ளது, ஸ்டேடியத்தில் சரளை கற்களும் சமம் இல்லாத தளங்களும் காணப்படுகிறது. ஸ்டேடியத்தை வீரர்கள் பயன்படுத்த முடிவதில்லை. ஆற்று மணல் மூலம் சரி செய்ய வேண்டும். ஸ்டேடியத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு சமூக ஆர்வலர்கள் நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.மரம் நடுவதற்கு தினமும் தண்ணீர் வினியோகம் செய்யும் வசதி செய்து தர வேண்டும். மாவட்ட விளையாட்டு துறையும் மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து எவ்வித கவலையும் இல்லாமல் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதை கண்டித்து விரைவில் விளையாட்டு வீரர்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்வோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை