உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: திருப்புத்துார் போலீஸ் ஸ்டேஷனில் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர் தனுஷ்கோடியை கைது செய்ததை கண்டித்து சிவகங்கையில் தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பேரூராட்சி ஊழியர் சங்க மாநில தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன்,பேரூராட்சி ஊழியர் சங்க முன்னாள் பொது செயலாளர் கனகராஜ், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மா வட்ட செயலாளர் லதா, பேரூராட்சி ஊழியர் சங்க மாநில துணை தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில பொது செயலாளர் மகாலிங்கம் நிறைவுரை ஆற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !