கல்லலில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஆர்ப்பாட்டம்
காரைக்குடி : கல்லலில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கல்லலில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் ஸ்டாண்ட் இல்லை. இதனால் பயணிகள், மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பஸ் ஸ்டாண்ட் அமைக்க வலியுறுத்தி நேற்று கல்லல் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.