நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் சார்பில் 9 பேருக்கு ரூ.93,500க்கான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவன் வரவேற்றார். தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சிதம்பரம், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை வழங்கினார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பி.ஆர்.ஓ., ராஜசெல்வன் நன்றி கூறினார்.