உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானியத்தில் மண்புழு உரப்படுக்கை   வழங்கல்

மானியத்தில் மண்புழு உரப்படுக்கை   வழங்கல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு மண்புழு உர படுக்கை மானிய விலையில் வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: விவசாயிகள் மண்புழு உரம் உற்பத்தி செய்து பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் மண்ணில் உயிர்ம கரிம சத்தை அதிகரித்து, மண்வளம் மேம்படுத்தப்படும். பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பண்ணை கழிவுகளை திறம்பட கையாள செய்து உரச்செலவினை குறைத்திட மண்புழு உரப்படுக்கை மானியத்தில் வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். குறைந்தது 50 சென்ட் நிலத்துடன், கால்நடை வைத்திருக்க வேண்டும். விவசாயிகள் உழவர் செயலி அல்லது அக்ரிஸ்நெட் வலைதளத்தில் பதிவு செய்யலாம். சிறு, குறு, ஆதிதிராவிட, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை உண்டு. இத்திட்டத்தில் ஒரு மண்புழு உரபடுக்கை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். மண்புழுக்கள், மரக்குச்சிகள் மற்றும் தொழு உரம் விவசாயிகள் வாங்கி அதற்கு பின்னேற்பு மானியமாக ரூ.1,500 வழங்கப்படும். இதில் அதிகபட்சமாக இரண்டு மண்புழு உரப்படுக்கை பெறலாம். அட்மா திட்டம் மூலம் மண்புழு தயாரிக்க பயிற்சி தரப்படும். இம்மாவட்டத்திற்கு 600 மண்புழு உரப்படுக்கை பெறப்பட்டு அனைத்து வட்டாரங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ