சிவகங்கையில் பார்மலின் கலந்த மீன் விற்பனை பொதுமக்கள் புகார்
சிவகங்கை: சிவகங்கைக்கு வரும் மீன்களில் 'பார்மலின்' கலந்து விற்பதால் அதை சாப்பிடுவோருக்கு நோய் பரவும் அச்சம் நிலவி வருகிறது.சிவகங்கைக்கு தொண்டி, ராமேஸ்வரத்தில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. கடலில் பிடித்து பல நாட்கள் ஆன நிலையில் கொண்டு வரப்படும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க, அதன் மீது 'பார்மலின்' கெமிக்கல் தடவப்படுகிறது. இதை சாப்பிடுவோருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. எனவே இறைச்சி மார்க்கெட், சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் 'பார்மலின்' செய்யப்படாமல், தரமானதாக விற்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் பாரபட்சமின்றி சோதனை செய்ய வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.