உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயறு சாகுபடி பயிற்சி முகாம்

பயறு சாகுபடி பயிற்சி முகாம்

திருப்புவனம்; திருப்புவனம் அருகே பெத்தானேந்தல் கிராமத்தில் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் ஊராட்சி தலைவர் ராமேஸ்வரி தலைமையில் நடந்தது.வேளாண் விரிவாக்க திட்டத்தின் கீழ் நடந்த இந்த பயிற்சி முகாமில் உதவி இயக்குனர் சுந்தரமகாலிங்கம் செயல்படுத்தும் திட்டங்கள், இடு பொருட்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நுண்ணுாட்ட உரம் குறித்து விளக்கமளித்தார்.நெல் அறுவடைக்கு பின் பயறு வகை சாகுபடி தொழில்நுட்பம், விதை நேர்த்தி, விதை கடினப்படுத்துதல், சிறுதானிய சாகுபடி குறித்து ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் குணசேகரன் வழிகாட்டினார்.முகாமில் துணை வேளாண் அலுவலர் முனியசாமி , உதவி வேளாண் அலுவலர் கரும்பு செல்வம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சத்யா விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்