உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு

மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதலாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் மானாமதுரை வீர அழகர் கோயிலில் அதிகாலை உற்ஸவர் சுந்தரராஜ பெருமாளுக்கும், வீர ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை, பூஜை நடத்தப்பட்டு வடை, வெற்றிலை மாலைகள் சாத்தப்பட்டன. இதே போன்று தியாக வினோத பெருமாள், அப்பன் பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும், வேம்பத்துார் பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடை பெற்றன. இளையான்குடி மதன வேணுகோபால பெருமாள் கோயிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். * கல்லல் ஒன்றியம் கொங்கரத்தி வன்புகழ் நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி துவக்கத்தை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் காலை 8:30 மணிக்கு புண்யாகம், தொடர்ந்து சங்கல்பம் நடந்து மலர்கள் ஆவாகனம் செய்யப்பட்டது. பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் மூலவர் தரிசனம் மட்டும் நடந்தது. அன்னதானம் நடந்தது. தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயிலில் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடந்தன. கிருஷ்ணர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை