குடியிருப்பில் மலைப்பாம்பு
திருப்புத்தூர்;பிள்ளையார்பட்டி கோயில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சேவல் ஒன்றை விழுங்கிக் கொண்டிருந்த மலைப்பாம்பை மக்கள் பார்த்தனர். 10 நீளமுள்ள அந்த மலைப்பாம்பை உயிருடன் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். திருப்புத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மதகுபட்டி மண் மலையில் விடப்பட்டது.