உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாழடைந்த கட்டடத்தில் ரயில்வே மருத்துவமனை

பாழடைந்த கட்டடத்தில் ரயில்வே மருத்துவமனை

காரைக்குடி : காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள்பணியாற்றி வருகின்றனர். காரைக்குடி பழைய ரயில்வே ஸ்டேஷன் நிலையம் அருகே ரயில்வே சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் ரயில்வே ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ. 13.57 கோடி மதிப்பீட்டில், லிப்ட் எஸ்கலேட்டர் இருக்கை, நுழைவு வாயில் பார்க்கிங் கட்டும் பணி உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களும் இந்த கட்டடத்தின் அருகில் தங்கி உள்ளனர். இந்நிலையில், ஓட்டுக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியில் மரங்கள் சாய்ந்து விழுந்து பல நாட்களாகியும் இதனை அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால் ஓட்டுக்கட்டடம் முற்றிலும் சேதமடைந்து பணியாளர்களுக்கும் அபாயம் நிலவுகிறது. சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்றி சேதமான கட்டடத்தை சரி செய்ய வேண்டும் என்று பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ