வாசகர்கள் கருத்துகள் ( 1 )
juveee
ஏப் 17, 2025 18:35
Age now 63 or 75
சிவகங்கை:சிவகங்கையில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாய் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் முருகேசன் 63. இவர் பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் 2016 அக்.16ல் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
Age now 63 or 75