உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் குறைதீர் முகாம்

ரேஷன் குறைதீர் முகாம்

சிவகங்கை: அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை (அக்., 10) ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் கார்டு கேட்டல், அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைகள் சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !