உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத கட்டடத்தில் ரேஷன் கடை: ஊழியர்கள் அச்சம்

பராமரிப்பில்லாத கட்டடத்தில் ரேஷன் கடை: ஊழியர்கள் அச்சம்

காரைக்குடி; காரைக்குடியில் பராமரிப்பில்லாத சேதமடைந்த மாநகராட்சி கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படுவதால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். காரைக்குடி தாலுகாவில் 140 ரேஷன் கடைகள் மூலம் 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. காரைக்குடியில் 40க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. காரைக்குடி ராஜிவ் சிலை பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பல கடைகள் வாடகை பாக்கி செலுத்த முடியாமல் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில கடைகள் மட்டுமே இயங்குகிறது. பராமரிப்பின்றி கட்டடம் முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் செக்காலை 2 ரேஷன் கடை செயல்படுகிறது. இவ்வணிக வளாக கட்டடத்தின் கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. ரேஷன் கடையின் உட்புற சுவரில் மழைநீர் கசிந்து காணப்படுகிறது.பொருட்கள் வாங்கும் மக்களுக்கு அபாயம் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ