உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கிளாதரியில் செம்மண் கடத்தல்

 கிளாதரியில் செம்மண் கடத்தல்

பூவந்தி: பூவந்தி அருகே கிளாதரி கிராமத்தில் அனுமதியின்றி செம்மண் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிளாதரியில் தர்ப்பூசணி, மிளகாய், வாழை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. பெரியாறு பாசன கால்வாய் வசதி இருந்தாலும் அதில் தண்ணீர் வருவதில்லை. மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் செம்மண் அள்ள அனுமதி வாங்கி விட்டு சிவகங்கை மாவட்டம் கிளாதரியில் மண் அள்ளி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் புதிய சாலை பணிகளுக்காக லாரிகளில் மண் அள்ளப்படுகிறது. பல இடங்களில் மண் அள்ளப்பட்டு பள்ளங்களாக இருப்பதால் மழை தண்ணீர் நீர்நிலை மற்றும் வயல்களுக்கு வருவதில்லை. எனவே சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை