உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை -- கல்லல்- காரைக்குடி டவுன் பஸ் தொடர்ந்து இயக்க கோரிக்கை 

சிவகங்கை -- கல்லல்- காரைக்குடி டவுன் பஸ் தொடர்ந்து இயக்க கோரிக்கை 

சிவகங்கை : சிவகங்கை - - கல்லல் - காரைக்குடி அரசு டவுன் பஸ் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஓடுவதால் மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் தவிப்பிற்கு உள்ளாகின்றனர்.சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் அரசு டவுன் பஸ் நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பனங்குடி, பாகனேரி, சொக்கநாதபுரம், கல்லல் வழியாக தினமும் காரைக்குடிக்கு சென்று வர வேண்டும்.இந்த பஸ் மூலம் நாட்டரசன்கோட்டை முதல் கல்லல் வரையிலான கிராமப்புற மாணவர்கள், கல்லல், காரைக்குடியில் உள்ள பள்ளி, கல்லுாரிக்கு சென்று வர ஏதுவாக அமைந்திருந்தது. அதே போன்று காரைக்குடி, கல்லல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் தினமும் இயங்கி வந்த சிவகங்கை - கல்லல் -- காரைக்குடி அரசு டவுன் பஸ்சை வெள்ளி முதல் திங்கள் வரை மட்டுமே இந்த வழித்தடத்தில் ஓட்டுக்கின்றனர். செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் ஓட்டுவதில்லை.பஸ் வராத நாட்களில் மாணவ, மாணவிகள், ஊழியர்கள் திருப்புத்துார் சென்று, அங்கிருந்து காரைக்குடிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே சிவகங்கை -- கல்லல் - காரைக்குடி வரை சென்று வரும் அரசு டவுன் பஸ்சை தடையின்றி தினமும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ