மேலும் செய்திகள்
ஏட்டு சுரைக்காயான கன்னிவாடி நாயோடை பராமரிப்பு
22-May-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் வழியாக செல்லும் பாலாற்றில் பராமரிப்பு பணிகளுக்குப் பின் தரைதளத்தில் சரியான மட்டத்தை உருவாக்க விவசாயிகள் கோரியுள்ளனர்.நத்தம் கரந்தமலையில் உற்பத்தியாகி சிங்கம்புணரி, திருப்புத்தூர் வழியாக செல்லும் பாலாற்றில் தனியார் பங்களிப்புடன் மாவட்ட நிர்வாகம் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. சிங்கம்புணரி சிலநீர்ப்பட்டி அருகிலிருந்து இப்பணி துவங்கியது. தற்போது, சில நாட்களில் திருப்புத்துார் பெரிய கண்மாயில் முடிய உள்ளது. தொடர்ந்து சிங்கம்புணரி பகுதி ஆற்றில் பணி தொடர உள்ளது.தற்போதைய பராமரிப்பு பணியால் ஆற்றிலிருந்த முட்புதர்கள், செடிகள் அகற்றப்பட்டுள்ளது. ஆற்றில் தரைப்பகுதியிலிருந்த மேடு, பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்குப் பின் பாலாறு பராமரிக்கப்பட்டுள்ளது இப்பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதனால் வரும் மழைக்காலத்தில் தண்ணீர் வேகமாக பாய்ந்து செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கடந்த ஆண்டில் திருவுடையார்பட்டி கண்மாய் வரை நீர்வரத்து இருந்தது.இந்த ஆண்டு திருப்புத்தூர் பெரியகண்மாயைக் கடந்து செல்லும் வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது சீரமைக்கப்பட்டுள்ள ஆற்றில் நீர் வரத்தை வேகப்படுத்த சரியான அளவில் மண்தரையை மட்டப்படுத்த விவசாயிகள் கோரியுள்ளனர்.வழக்கமாக ஆறுகளில் 1000 மீட்டர் நீளத்திற்கு ஒரு மீட்டர் சரிவு வருமாறு தரைத்தளம் மட்டப்படுத்தப்பட்டிருக்கும். அப்போதுதான் சீரான நீர் ஓட்டம் இருக்கும். பாலாற்றில் 500 மீட்டர் நீளத்திற்கு ஒரு மீட்டர் சரிவாக மட்டம் இருந்துள்ளது. பல இடங்களில் மணல் திருட்டால் இது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரியான மட்டத்தை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள விவசாயிகள் கோரியுள்ளனர்.
22-May-2025