மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
டெட் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்
05-Sep-2025
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை ஆகிய 4 இடங்களிலும் நடத்த தமிழ்நாடு தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலப் பொதுச் செயலர் இளங்கே கூறியதாவது: 10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடவாரியாக 100 மதிப்பெண் பெற வைப்பது, குறைந்த பட்சம் 60 மதிப்பெண் பெற வைப்பது, 100 சதவீதம் அனைவரும் தேர்ச்சி பெற வைப்பது உள்ளிட்ட தொடர்பான கருத்தியல் அடிப்படை பயிற்சி வகுப்பை வரவேற்கிறோம். 5 நாள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பு சிவகங்கையில் நடைபெறுகிறது. இந்தப்பயிற்சி வகுப்பில் 500 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் சிவகங்கைக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. குறிப்பாக பெண் ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் 4 இடங்களில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்றார்.
05-Sep-2025
05-Sep-2025