உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரிக்கை

 பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரிக்கை

சிவகங்கை: பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை, அடுப்பு வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என சிவகங்கையில் மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனு அளித்தனர். மானாமதுரையில் 30 தொழிற்கூடங்கள் மூலம் 300 குடும்பமும் இது தவிர உடைகுளம், மேல, கீழபசலை, வேதிய ரேந்தல், நவத்தாவு கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு குடிநீர் பானை, சமையல் பானை, மண் அடுப்பு, கார்த்திகை விளக்குகள் உட்பட ஏராளமான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இம்மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வா தாரம் காக்க, வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் மண் அடுப்பு, பானை வழங்க வேண்டும். மழை காலங்களில் மழைக்கால நிவாரண உதவி தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராதா தலைமையில் நிர் வாகிகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்