உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீடு கட்டும் திட்ட பயனாளிகளை மீண்டும் தேர்வு செய்ய கோரிக்கை

வீடு கட்டும் திட்ட பயனாளிகளை மீண்டும் தேர்வு செய்ய கோரிக்கை

இளையான்குடி: இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வீடு இல்லாதவர்களுக்கு அரசு வீடு கட்ட உதவி வருகிறது. அனைத்து கிராமங்களிலும் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு சொந்தமாக இடம் பட்டாவோடு இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ள நிலையில் கீழநெட்டூர் ஊராட்சிக்குட்பட்ட கணபதியேந்தல் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு தற்போது தான் நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.ஆனால் வீடு கட்டுவதற்கான பயனாளிகள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.ஆகவே தற்போது மீண்டும் வீடு கட்டும் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை