உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் இடிந்த போலீஸ் குடியிருப்பு குடியிருப்போர் அச்சம்

காரைக்குடியில் இடிந்த போலீஸ் குடியிருப்பு குடியிருப்போர் அச்சம்

காரைக்குடி : காரைக்குடியில் போலீஸ் குடியிருப்பில் ஓட்டு கட்டடங்கள் இடிந்து கிடப்பதால், அருகில் குடியிருப்போருக்கு அபாயம் நிலவுகிறது.காரைக்குடியில் 1961ம் ஆண்டு போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. 50க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது, 30க்கும் மேற்பட்ட ஓட்டுக் கட்டடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதமடைந்த கட்டடத்தின் மத்தியில் சில போலீசார், தங்களது குடும்பத்துடன் தங்கி உள்ளனர். அருகில், புதிய காவல்துறை அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.வீடுகள் கிடைக்காததாலும், போதிய இட வசதி இல்லாததாலும், சேதமடைந்த ஓட்டுக் கட்டடத்திலேயே சிலர் தங்கி உள்ளனர். மேற்கூரை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்திலேயே குடியிருந்து வருகின்றனர்.பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து கிடப்பதால் விஷ ஜந்துகளும் வந்து செல்கிறது. அபாயம் ஏற்படும் முன் சேதம் அடைந்த கட்டடத்தை சரி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை