மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் ஆர்ப்பாட்டம்
11-Jun-2025
சிவகங்கை; நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, பணி காலமாக முறைப்படுத்த கோரி சிவகங்கை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மாரி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன், துணை தலைவர் சுதந்திரமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எம்.ராஜா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார்.
11-Jun-2025