உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காரைக்குடியில் ரூ.1.50 லட்சம் மோசடி

 காரைக்குடியில் ரூ.1.50 லட்சம் மோசடி

சிவகங்கை: காரைக்குடி அருகே 48 வயது நபரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி நம்ப வைத்து ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவர் குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பகுதியை சேர்ந்த 48 வயது நபர். இவர் கடந்த 10ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தை பார்த்தார். அந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டார். அவரது வாட்ஸ் ஆப்பில் ஒருவர் பேசியுள்ளார். அவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அந்த நபரை நம்ப வைத்தார். அவர் பேசியதை நம்பிய நபர் அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்தார். அதன் பின்னர் வாட்ஸ் ஆப்பில் பேசியவரை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை