உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச் சீரமைக்க ரூ.1.55 கோடி ஒதுக்கீடு 

இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச் சீரமைக்க ரூ.1.55 கோடி ஒதுக்கீடு 

சிவகங்கை : இடைக்காட்டூரில் 130 ஆண்டு பழமையான திருஇருதய ஆண்டவர் சர்ச் பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு ரூ.1.55 கோடி ஒதுக்கியுள்ளது.சிவகங்கை மாவட்ட ஆன்மிக சுற்றுலா தலத்தில் பிரசித்தி பெற்றது மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள திருஇருதய ஆண்டவர் சர்ச். இந்த சர்ச் 1894ம் ஆண்டு கட்டப்பட்டது. பிரெஞ்சு முறைப்படி கட்டப்பட்ட இந்த சர்ச் புனரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச்சை பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்க அரசு சிறுபான்மையினர் நல கமிஷன் மூலம் நிதி ரூ.1 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரத்து 16 வரை அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புனரமைப்பு பணிக்கான உத்தரவையும் அரசு வழங்கியுள்ளது.கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, வேண்டுதலுக்காக பல மதத்தினரும், சுற்றுலா பயணிகளும் வருகை தந்து, சர்ச்சை பார்வையிட்டு செல்வதோடு, திருஇருதய ஆண்டவரிடம் வேண்டுதல் வைத்து செல்கின்றனர். இந்த சர்ச்சில் ஆண்டு தோறும் நடக்கும் பாஸ்கு திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்களை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, நாடுகளை சேர்ந்த கிறிஸ்தவர்களும் வந்து செல்கின்றனர்.சர்ச் சீரமைப்பிற்கு ஒதுக்கிய நிதிக்கான அரசு உத்தரவையும்,பணி செய்வதற்கான உத்தரவு நகலையும் மாநில சிறுபான்மையினர் நல கமிஷன் தலைவர் ஜோஅருண், இடைக்காட்டூர் சர்ச் பாதிரியாரிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை