உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கடன் வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி

கடன் வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி

சிவகங்கை : தொழில் செய்வதற்கு தனியார் வங்கி மூலம் கடன்வாங்கித்தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவை சேர்ந்த இளைஞரின் அலைபேசிக்கு ,தொழில் செய்ய தேவையான கடன் பெறுவது குறித்த விளம்பரம் இன்ஸ்டாகிராம் ஆப்பில் வந்தது. அதில் இருந்த எண்ணை அந்த இளைஞர் தொடர்பு கொண்டார். அதில் பேசியவர் தனியார் வங்கியின் மூலம் கடன் பெற்று தருவதாக கூறி அவரை நம்ப வைத்தார். இதையடுத்து அந்த இளைஞர் பேசியவர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 2 லட்சத்து 5 ஆயிரம் செலுத்தினார். பணத்தை பெற்று கொண்டவர் கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றினார். இம்மோசடி குறித்து பைசர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி