33 மாணவர்களுக்கு ரூ.24 லட்சம் காப்பீடு
சிவகங்கை: சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் மாணவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். பெற்றோர்களை இழந்த குழந்தைகள், பெற்றோர்களின் ஒருவரை இழந்த மொத்தம் 144 குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் 33 மாணவர்களுக்கு ரூ.24 லட்சம் விபத்து காப்பீட்டிற்கான பத்திரத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். நகராட்சி தலைவர் துரைஆனந்த், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.