ரூ.300 கோடி மோசடி நிறுவன இயக்குனர் கைது
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே டி.சிறுவானுாரைச் சேர்ந்தவர் மாதவன், 37. இவர், காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு ஆலயம் நிதி நிறுவனம் நடத்தி, அதன் இயக்குனராகவும் இருந்தார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்களிடம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி, முதலீடாக பெற்ற 300 கோடி ரூபாயை, முதிர்வு தேதி முடிந்த பின்னரும் திரும்ப வழங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், 2022ல் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 28 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். தலைமறைவாக இருந்த நிதி நிறுவன இயக்குனர் மாதவனை கைது செய்ய, டி.எஸ்.பி., மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று மாதவனை கைது செய்தனர்.