உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டுறவு வங்கியில் ரூ.78.44 கோடி நிலுவை; 12,254 விவசாயிகள் இழுத்தடிப்பு  

கூட்டுறவு வங்கியில் ரூ.78.44 கோடி நிலுவை; 12,254 விவசாயிகள் இழுத்தடிப்பு  

சிவகங்கை; தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற ரூ.78.44 கோடி கடன் திரும்ப செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாக சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல் வெளியானது.சிவகங்கை மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகிறது.இந்த சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை அடமான கடன், கால்நடைகள் வளர்க்க கடன் வழங்கப்படுகிறது. பயிர், நகை, கால்நடை கடன் பெற்ற விவசாயிகள் பெரும்பாலும் வாங்கிய கடனை கூட்டுறவு வங்கிகளில் செலுத்துவதில்லை என புகார் எழுந்தது. நேற்று சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், பயிர் கடன் பெற்ற விவசாயிகளில் 10,104 பேர் ரூ.67.19 கோடி, கால்நடை வளர்ப்பு கடன் பெற்ற 2,150 விவசாயிகள் ரூ.11.25 கோடி என ஒட்டு மொத்தமாக தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 12,254 விவசாயிகள் ரூ.78.44 கோடி கடன் நிலுவை வைத்துள்ளதாக புகார் எழுந்தது.கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது; கடன் நிலுவை வைத்துள்ள விவசாயிகளிடம், பழைய கடனை பெற்றுக்கொண்டு, புதிதாக கடன் வழங்குமாறு கடன் சங்க செயலர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.அதன்படி விவசாயிகளும் பழைய கடன்களை செலுத்திவிட்டு, புதிய கடன்களை பெற்று வருகின்றனர். அனைத்து விவசாயிகளும் இந்நடைமுறையை கடைபிடித்து, வங்கியின் வளர்ச்சிக்கு உதவவேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ