உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்

சிவகங்கை: டிச., 17 ம் தேதியை ஓய்வூதியர் தினமாக அறிவிக்க வேண்டும் என சிவகங்கையில் நடந்த ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துமாடன் தலைமை வகித்தார். மாநில பிரதிநிதி துரைசிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பாண்டி வரவேற்றார். செயலாளர் சண்முகசுந்தரம் அறிக்கை வாசித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் கணபதி, பிரசார செயலாளர் சேசுசந்தியாகு, செயற்குழு நானிலதாசன், காமராஜ், தங்கவேலு, ராமமூர்த்தி, ஜெகதீஸ்வரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார். கூட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட பென்ஷனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் தொகை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டிச., 17 ம் தேதி ஓய்வூதியர் தின விழாவாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி