உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை மானாமதுரையில் நாளை துவக்கம்

சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை மானாமதுரையில் நாளை துவக்கம்

மானாமதுரை : மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா நாளை துவங்குகிறது. கர்நாடக இசைக் கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சத்குரு ஸதாசிவ பிரம்மேந்திராள் ஜீவசமாதி மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் சோமநாதர் சன்னதிக்கு பின்புறம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மே 5ம் தேதி மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.எஸ்.பி.ஏ., உண்ணாமலை அம்மாள் திருமண மஹாலிலும், 6ம் தேதி ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலிலும் நடைபெற உள்ள விழாவில் கர்நாடக இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு மற்றும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை