உப்பு 5 கிலோ ரூ.40ஆயிரம் 10 எலுமிச்சை ரூ.11 ஆயிரம்
ஏலத்தில் நன்கொடையாளர்கள் ஆர்வம்கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தக்குடி கைலாச விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை யொட்டி நடந்த பொருட்கள் ஏலத்தில் உப்பு 5 கிலோ ரூ 40 ஆயிரத்திற்கும், 10 எலுமிச்சை பழம் ரூ 11 ஆயிரத்து 500க்கும் ஏலம் போனது. சதுர்த்தி விழாவையொட்டி ஒக்கூர் நகரத்தார் விடுதியில் ஆண்டு தோறும் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அந்த வருவாய் கோயிலுக்கு பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு ஏலத்தில் உப்பு, சர்க்கரை, மஞ்சள், எலுமிச்சம்பழம், கற்கண்டு, கல்யாண மாலை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இதில் முதல் உப்பு ரூ 40,001, இரண்டாவது உப்பு 25, 000, மூன்றாவது உப்பு 12,501க்கும் ஏலம் போனது. அதேபோல் முதல் மஞ்சள் 16,001, இரண்டாவது மஞ்சள் 6,001 ஏலம் போனது. அதேபோல் முதல் எலுமிச்சம்பழம் 11,500க்கும் இரண்டாவது எலுமிச்சம்பழம் 5,555க்கும் ஏலம் போனது. முதல் கற்கண்டு 5,001, இரண்டாவது கற்கண்டு 1,001க்கு ஏலம் போனது. பேரிச்சம்பழம் 1,501, இரண்டாவது பேரிச்சம்பழம் 1,666க்கு ஏலம் போனது. முதல் கல்யாண மாலை 5,001, இரண்டாவது கல்யாண மாலை 7,002, மூன்றாவது கல்யாண மாலை 8,001க்கு ஏலம் போனது. முதல் சர்க்கரை 3,001, இரண்டாவது சர்க்கரை 1,501க்கு ஏலம் போனது. நிகழ்ச்சியில் கோவிலுார் நாராயண ஞான தேசிக சுவாமி, சென்னை வி.என்.சிடி. வள்ளியப்பன், பாதரக்குடி நகரத்தார் ஆண்கள் உபதேச குரு பீட ரவீந்திர சுவாமி, துலாவூர் நகரத்தார் பெண்கள் உபதேச குருபீட ஞானபிரகாச தேசிய சுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமு நன்றி கூறினார். ஏற்பாட்டினை நடப்பு நிர்வாகக் காரியக்காரர் தேவகோட்டை சோமசுந்தரம், நடப்பு இணை காரியக்காரர் மகிபாலன்பட்டி ராமநாதன் மற்றும் காரியக்காரர்கள் செய்தனர்.