உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாலாறு அருகே மணல் திருட்டு: கைது 3 லாரி, மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்

பாலாறு அருகே மணல் திருட்டு: கைது 3 லாரி, மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்

தி.மு.க., கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்குகண்டவராயன்பட்டி: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றியம் மாங்குடியில் தனியார் இடத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை கைது செய்து 3 லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்புத்துார் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர் பசீர்முகமது உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.சிங்கம்புணரியில் இருந்து திருப்புத்துாருக்கு வரும் பாலாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து வி.ஏ.ஓ., கணேஷ்கிருஷ்ணகுமார் கண்டவராயன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாங்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.அங்கு பாலாற்றின் அருகே சிலர் மண் அள்ளுவது கண்டனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த சிலர் தப்பினர். மணல் திருட்டில் ஈடுபட்டதாக டிரைவர்கள் பாண்டியன் 31, பிரகாஷ் 40, கோபி 25, ஆகியோரை கைது செய்து 3 லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருப்புத்துார் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர் பசீர்முகமது, மற்றொரு டிரைவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பாலாற்றில் தொடரும் மணல் திருட்டை தடுக்க இரவு போலீசார் ரோந்து பணிகளை விரைவுபடுத்த எஸ்.பி., ஆஷிஷ் ராவத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ