துாய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று துாய்மை பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சிக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., தேசியக் குழு உறுப்பினர் மீனாள், உள்ளாட்சி பணியாளர் குழு மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், நகரத் தலைவர் முருகன், நகரச் செயலாளர் ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.